அரசியல், அரசியல் தந்திரம், ஏமாற்றும் தன்மை,
மற்றும் இரு பிரிவுகளுக்கு இடையிலான தனிநபர் அல்லது சமூக பேச்சு வார்த்தை ஆகியவை இவ்வுலகில்
இருப்பதை நாம் காண்கிறோம். இவை உயர்கிரக அமைப்புக்களிலும் உள்ளன என்பது இச்சுலோகத்திலிருந்து
தெளிவாகிறது. தேவர்கள் அமிர்தத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பலி மகாராஜனிடம்
சென்றனர். ஆனால், தேவர்கள் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளதால், அமிர்தம் உற்பத்தியானதும்
அதை தேவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு, தங்களது சுய நோக்கங்களுக்காக அதை உபயோகித்துக்
கொள்ளலாம் என்றெண்ணிய அசுரர்கள் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தனர். உண்மையில் தேவர்களுக்கும்
அதே எண்ணம் தான் இருந்தது. தேவர்கள் முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணுவின் பக்தர்களாக
இருந்தனர். ஆனால் அசுரர்களோ பகவான் விஷ்ணுவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதனால் பகவான்
விஷ்ணு தேவர்களுக்குத் துணையாக இருந்தார். இதுவே இவர்களுக்கிடையிலுள்ள ஒரே வேறுபாடாகும்.
பிரபஞ்சம் முழுவதிலும் இரு பிரிவினர் உள்ளனர் விஷ்ணு குழுவினர், அல்லது இறையுணர்வு
கொண்ட குழுவினர் ஒரு பிரிவும், நாஸ்திகர்கள் மற்ற பிரிவுமாவார். நாஸ்திக பிரிவினர்
சந்தோஷமுடையவர்களாகவோ அதாவது வெற்றி உடையவர்களாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் இறையுணர்வு
கொண்ட பிரிவினர் எப்பொழுதும் மகிழ்ச்சியும், வெற்றியும் உடையவர்களாகத் திகழ்ந்தனர்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8.6.31- பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment