நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தில் அனுமதிக்கப்படாத அல்லது தூய பக்தர்களால் பாடப்படாத பாடல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆலயத்தில் சினிமாப் பாடல்களைப் பாடுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது.
பகவானை நாம் காண நேர்ந்தாலும், அவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகக்கூடும். கிருஷ்ணர் பூமியில் தோன்றிய போது பலர் அவரைக் கண்டனர். ஆனால் அவர்தான் முழுமுதற்கடவுள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஸ்ரிதம். மூடர்களும், அயோக்கியர்களும் கிருஷ்ணரை நேரடியாகக் கண்டனர் என்றபோதிலும், அவர்தான் முழுமுதற்கடவுள் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. பகவானை நேராகக் கண்ட பிறகும், துரதிர்ஷ்டசாலி ஒருவனால் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே பகவான் அல்லது கிருஷ்ணரைப் பற்றி நாம் நம்பத்தகுந்த வேத இலக்கியத்திலிருந்தோ அல்லது வேதத்தை முறையாக அறிந்தவர்களிடம் இருந்தோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன் பிரம்மா முழுமுதற்கடவுளைக் கண்டதில்லை என்றாலும், பகவான் ஸ்வேதத்வீபத்தில் இருக்கிறார் என்பதில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். இவ்வாறாக அங்கு செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பகவானிடம் அவர் பிரார்த்தனைகளைச் செய்தார்.
இவை சாதாரண, கற்பனையான பிரார்த்தனைகளல்ல. இப்பதத்தில் தைவீபிர் கீர்பி: எனும் சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், பிரார்த்தனைகள் வேத இலக்கியத்தால் அனுமதிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தில் அனுமதிக்கப்படாத அல்லது தூய பக்தர்களால் பாடப்படாத பாடல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆலயத்தில் சினிமாப் பாடல்களைப் பாடுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது. நாங்கள் பொதுவாக இரு பாடல்களைப் பாடுகிறோம். ஒன்று, ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி கௌர பக்த வ்ருத்த. என்பதாகும். இது சைதன்ய சரிதாம்ருதத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆசார்யர்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மற்றது, அனைவரும் அறிந்த மகா - மந்திரமான ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே. நரோத்தம தாஸ் தாகுரர், பக்தி வினோத தாகுரர் மற்றும் லோசன தாஸ் தாகுரர் ஆகியோருடைய பாடல்களையும்கூட நாம் பாடலாம். ஆனால் “ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய” மற்றும் ஹரே கிருஷ்ண “மஹா மந்திரம்” ஆகிய இவ்விரு பாடல்களும், முழுமுதற்கடவுளை நம்மால் காண முடியவில்லை என்றாலும், அவரை திருப்திபடுத்துவதற்குப் போதுமானவையாகும். அதிகாரப்பூர்வமான இலக்கியத்தின் மதிப்பைக் காட்டிலும் அல்லது அங்கீகரிக்கப் பட்ட நபர்களின் அதிகாரப்பூர்வமான கூற்றுகளின் மதிப்பைக் காட்டிலும் பகவானைக் காண்பதென்பது அவ்வளவு முக்கியமானதல்ல.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8.5.25 - பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment