"ஒரு கோபியாக மாறி, தானும் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலையில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு சிவபெருமான் மிகக் கடும் தவமிருந்தார். அதைக் கண்ட யோக மாயையான பெளர்ணமாசி மிகவும் மகிழ்ந்து. அவர் முன்னால் தோன்றினாள். சிவபெருமானின் வேண்டுதலை அறிந்து அவரைப் பிரம்மகுண்டம் என்ற புனித தீர்த்தத்தில் முக்கினாள்.அவ்வளவுதான்! சிவபெருமான் ஒரு அழகான இளமையான கோபி ஆனார். அவர் ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களுடன் நடத்திய ரஸ லீலா நடந்து கொண்டிருந்த இடத்தை அடைந்து சற்று தூரத்தில் மறைந்து நின்று ரஸ லீலாவைப் பார்க்க முயன்றார்.
"உடனடியாக ஸ்ரீகிருஷ்ணரும் மற்ற கோபியர்களும் தங்கள் மன மகிழ்ச்சியில் பெரும் வித்தியாசத்தை உணர்ந்தனர். அவர்களால் மகிழ்ச்சியுடன் ஆட முடியாமல் அவர்கள் தங்களுக்குள்ளேயே. "ஏன் இன்று வழக்கம்போல் மகிழ்ச்சியே இல்லை?" என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டு, காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதற்காக அக்கம், பக்கம் எல்லாம் தேடிப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் கோபியாக நின்று கொண்டிருந்த சிவபெருமானைக் கண்டு, 'நீ யார்? உன் பெயர் என்ன? யார் உன் தாய் தந்தையர்கள்? உன் கணவனின் பெயர் என்ன? உன் மாமனார் வீடு எங்கேயுள்ளது?' என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டுத் துருவினர். கோபியாக இருந்த சிவபெருமான் பதில் எதுவுமே பேசாமலிருந்ததால், கோபியர்கள் அவரது கன்னத்தில் பலமாக அறைந்தனர். இவ்வாறு பல கோபியர்களும் மாறி மாறி அறைந்ததால் அவரது கன்னம் சிவந்து வீங்கியது. வலி தாங்க முடியாமல், "யோக மாயை! யோக மாயை! தயவு செய்து என்னைக் காப்பாற்று! நான் கிருஷ்ணரின் ரஸ லீலாவுக்கு இனி வரவே மாட்டேன்! அல்ல. பிருந்தாவனத்துக்கே இனி வர மாட்டேன்”. என்று கதறினார். இதைக் கேட்டதும் பெளர்ணமாசி உடனே விரைந்து வந்து கோபியர்களிடம். "இந்த கோபி (சிவபெருமான்)யிடம் நீங்கள் கருணை காட்டுங்கள். இவள் என் அன்பின் பாத்திரம்” என்று வேண்ட, பெளர்ணமாசியின் வேண்டுகோளின்படி கோபியர்கள் சிவபெருமானை ஒரு கோபியாகச் சேர்த்துக் கொண்டனர். ஸ்ரீ கிருஷ்ணர், கோபியாக நின்ற சிவபெருமானுக்கு "கோபீஸ்வரா" அதாவது கோபியர்களால் ஆளப்படும் ஈஸ்வரர் என்று பெயர் வழங்கியது மட்டுமின்றி, "கோபீஸ்வரர்தான் ரஸ லீலாவின் காவலர்" என்று அவருக்குப் பொறுப்பையும் அளித்து "கோபீஸ்வரரின் அனுமதியின்றி எவரும் ரஸ லீலாவில் பங்கு கொள்ளவே முடியாது" என்று விதியையும் கூறினார்".
சிவராத்திரி அன்று, கீழ்வருமாறு சிவபெருமானைத் துதித்துப் போற்றுகிறோம்.
"பிருந்தாவன வனிபதே! ஜெய ஸோம ஸோம மெளலே
சனக்க சனந்தன சனாதன நாரதேத்ய
கோபீஸ்வரா! பிரஜ விலாஸி யுஹாங்க்ரி பத்மே
பிரேம பிரயச்ச நிருபாதி நமோ நமஸ் தே"
(சங்கல்ப கல்பத்ருமா -103)
"ஓ, பிருந்தாவனத்தின் வாசலில் நின்று காப்பவரே! ஓ ஸோமா, உமக்கு வந்தனம்! சந்திரனைத் தலையில் சூடி, சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் நாரதர் போன்ற மகா பெரும் முனிவர்கள் முதற் கொண்டு அனைத்து முனிவர்களும் வழிபடும் கோபீஸ்வரா! உமக்கு நான் என் பணிவான வந்தனங்களைச் செலுத்திகிறேன். பிரஜ மண்டலத்தில் அற்புத லீலைகளை நடத்தும் ஸ்ரீ ராதா மாதவரின் பாதக் கமலங்களின் மேல் எனக்குப் பிரேம பக்தி உண்டாக தயைக் கூர்ந்து அருள் புரிவீராக! உமக்கு நான் திரும்பத் திரும்ப வந்தனம் செய்கிறேன்"
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment