மனம் என்பது நமது முந்தைய பிறவிகளின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் பாதுகாத்து வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கு
கனவுகளில் நாம் சில நேரம் காண்பவை நாம் இதற்கு
முன்பு அறியாத ஒரு செய்தியாக இருக்கும். சிலநேரங்களில் கனவில் நாம் வானில் பறப்பதுபோல்
இருக்கம். ஆயினும் இதற்கு முன்பு நாம் பறந்ததில்லை. நமது முற்பிறவியில் நாம் தேவனாகவோ
அல்லது விண்வெளி வீரனாகவோ வாழ்ந்து வானில் பறந்திருக்கிறோம் என்பதே இதன் உட்பொருள்.
நமது அடிமனதில் இந்த எண்ணம் புதைந்திருக்கிறது. அதனால் அது திடீரென்று தன்னை வெளிப்படுத்துக்
கொள்கிறது. இது ஆழத்திலுள்ள நீர் கொந்தளித்து மேற்பகுதிக்கு வந்து நீர்க்குமிழிகளாகத்
தோன்றுவதற்கு ஒப்பாகும். சிலநேரங்களில் நாம் கனவில முற்றிலும் புதிய இடங்களுக்கெல்லாம்
செல்வதுபோல் காண்கிறோம், நமது முற்பிறப்பின் அநுபவத்திற்கு இதுவே சிறந்த சான்றாகும்.
இந்த எண்ணம் நமது அடிமனதில் பாதுகாக்கப்படுகிறது. இதுவே நமது கனவில் அல்லது சிந்தனையில்
வெளிப்படுகிறது இதனால் மனம் என்பது நமது முந்தைய பிறவிகளின் அனுபவங்களையும் சிந்தனைகளையும்
பாதுகாத்து வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கு எனலாம். இவ்வாறு நமது முற்பிறப்பிற்கும்
இப்பிறப்பிற்கும் இடையிலும், இப்பிறப்பு மற்றும் அடுத்த பிறப்பிற்கும் இடையிலும் ஒரு
சங்கிலித் தொடர் இருந்துகொண்டேயிருக்கிறது. இதுவும் சிலநேரங்களில் நாம் ஒருவரை பிறவிக்
கவிஞர் என்றும், பிறவி விஞ்ஞானி என்றும் பிறவி பக்தரென்றும் சொல்வதின்மூலம் உறுதியாகிறது
நாமும் அம்பரீஷமன்னரைப் போல் இப்பிறவியில் கிருஷ்ணரைத் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தோமென்றால்
(ஸ வை மன: க்ருஷ்ண பதாரவிந்தயோ:) நாம் நிச்சயம் நமது மரணத்திற்குப் பிறகு கடவுளின்
இருப்பிடத்தில் இடம் பெறுவோம். நமது கிருஷ்ண உணர்வு முயற்சி இப்பிறப்பில் முழுமை பெறவில்லையென்றால்
அது நமது அடுத்த பிறவியில் தொடர்ந்து வரும். இது பகவத்கீதையில்(6.41)
“வெற்றி பெறாத யோகி அனேக வருடங்கள் புண்ணிய
உயிர்கள் வாழும் உலகத்தின் வாழ்ந்து நற்குடும்பத்தலி அல்லது செல்வந்தர் குடும்பத்தில்
பிறக்கிறான்”.
கிருஷ்ணருக்கான தியான நெறிகளை நாம் கடுமையாகப்
பின்பற்றினால் நமது அடுத்த பிறவியில் கிருஷ்ணலோகம் எனும் கோலோக பிருந்தாவனத்தில் பிறப்போம்
என்பது உறுதி.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 4.29.64 - பொருளுரை )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment