மொழிபெயர்ப்பு
சதீ தொடர்ந்து கூறினாள்: எனது அன்பான தந்தையே,
நீர் சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டதின் மூலம் மிகப் பெரியத் தவரைச் செய்திருக்கிறீர்.
‘சி’ மற்றும் ‘வ’ என்னும் இரண்டெழுத்துக்களுடைய சிவ என்னும் நாமம் ஒருவரது எல்லாப்
பாவங்களையும் நீக்குகிறது. அவரது ஆணைகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. சிவபெருமான் எப்போதும்
தூய்மையானவர். அவர் மீது உம்மைத் தவிர வேறு யாராலும் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியாது.
சிவபெருமான் பௌதீக உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும்
மிகச் சிறந்த மகாத்மாவாக விளங்குகிறார். உடலோடு ஆத்மாவை அடையாளம் காணும் மனிதர்களுக்கு
அவரத நாமம் மிகவும் மங்கலமானதாகும். இதுபோன்ற மனிதர்கள் சிவபெருமானைச் சரண் புகுந்தால்,
படிப்படியாகத் தாம் இந்தப் பரு உடல் அல்ல, ஆத்மா என்று உணர்ந்து கொள்வர். சிவம் என்றால்
மங்கலம் என்று பொருள். உடலினுள் இருக்கும் ஆத்மா மங்கலகரமானதாகும். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி:’
“நான் பிரம்மம்”. இவ்வுணர்தலே மங்கலம் ஆகும். ஒருவன் தான் ஆத்மா என்று உணராதவரை அவன்
எதைச் செய்தாலும் அது அமங்கலம் ஆகும். சிவம் என்றால் “மங்கலம்”. சிவபெருமானின் பக்தர்கள்
படிப்படியாக ஆன்மீக அடையாளம் கண்டுணரும் நிலையினை எய்துகின்றனர். ஆனால் இது மட்டும்
போதாது. மங்கலகரமான வாழ்க்கை ஆன்மீக அடையாளத்தினைக் கண்டுணரும் நிலையிலிருந்தே தொடங்குகிறது.
அதற்கும் மேலாக பரமாத்மாவுடன் தனக்கிருக்கும் உறவினைப் பற்றியெல்லாம் புரிந்து கொள்ள
வேண்டியதிருக்கிறது. ஒருவன் சிவபெருமானின் உண்மையான பக்தனாக இருந்தால் அவன் ஆத்ம உணர்தலை
அறியும் நிலையினை அடைகிறான். ஆனால் அவன் புத்திமானாக இல்லாதிருக்கும் பட்சத்தில், தான்
ஆத்மா (அஹம் ப்ரஹ் மாஸ்மி) என்னும் உணர்வினைப் பெற்று அத்துடன் நின்றுவிடுகிறான். அவன்
அறிவுடையோனாக இருந்தால் அவனும் சிவபெருமான் போல் சதா சர்வகாலமும் வாசுதேவரின் சிந்தனையிலேயே
மூழ்கியிருப்பான். முன்னரே, ஸத்த்வம் விஷுத்தம் வஸுதேவ ஷப்திதம்: என்று விளக்கப்பட்டிருக்கிறது.
வாசுதேவராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளையே சிவபெருமான் எப்போதும் தியானித்துக்
கொண்டிருப்பார். இவ்வாறு சிவபெருமானின் மங்கலகரமான நிலையினை ஒருவன் உணரவேண்டும் என்றால்
அவன் விஷ்ணு வணக்கம் செய்தல் வேண்டும். ஏனென்றால் சிவபெருமானே சிவபுராணத்தில் வழிபாடுகள்
அனைத்திலும் சிறந்தது விஷ்ணு வழிபாடே என்று கூறுகிறார். பகவான் விஷ்ணுவின் தலைசிறந்த
பக்தராதலினால் சிவபெருமான் வணங்கப்படுகிறார். ஆகையினால் சிவபெருமானையும் பகவான் விஷ்ணுவையும்
சமநிலையில் வைத்துப் பார்க்கும் தவறினை யாரும் செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அதுவும்
நாத்திகக் கருத்தேயாகும். மேலும் வைஷ்ணவீய புராணம் மேலான முழுமுதற் கடவுளாக விஷ்ணு
அல்லது நாராயணரே விளங்குகிறார் என்றும் அவரோடு வேறு எவரையும் சமமாக வைத்துப் பார்க்கக்
கூடாது என்றும், அவர் பிரம்மதேவனோ, சிவபெருமானோ அல்லது பிற தேவர்களோ யாரையும் அவரோடு
ஒப்பிடக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment