நித்தாய் நாம் ஹாட்டே - நாம் ஹட்டா பஜன்
(ஸ்ரீகோத்ரும கல்பதரு வில் பக்திவினோத டாக்குரர்
1.
நித்தாய் நாம் ஹாட்டே. ஓ கே ஜாபிரே பாய் ஆய் சுட்டே
ஏஹே பாஷண்ட ஜகாய் மாதாய் து ஜன் சகல் ஹாட்டேர் மால் நிலே ஜூட்டே
2.
ஹாட்டேர் அம்ஸி மஹாஜன் ஸ்ரீ அத்வைத சனாதன்
பாண்டாரி ஸ்ரீ கதாதர் பண்டிட் விசக்ஷன்
3.
ஆச்சேன் செளகிதார் ஹரிதாஸ் ஆதி ஹோலன் ஸ்ரீ சஞ்சய்
ஸ்ரீ ஸ்ரீதர் மாதே தாலால் கேசவ பாரதீ ஸ்ரீ வித்யா வாச்சஸ்பதி
4.
ஹாட்டேர் மூல்ய நிருபண், நய பக்தி பரகாஷன்
பிரேம ஹேனோ முத்ரா சர்வ சார் சம்யமன நாய் கமீ பேஸீ சமான்
5.
ஓ ஜன்ரே சப யேதோ மனே போஜய் உதே
யேய் பிரேமுர் உத்தேஷ ஏக ஸாது உபதேஷ
சுதா மோய் ஹரி நாம் ரூப சு சந்தோஷ
யேதே பரோ நாய் ரே த்வேஷாத்வேஷ
காய் ஏக பாதே கானு குட்டே
1.ஓ அருமைச் சகோதரர்களே! பிரபு நித்யானந்தர் நமக்காக புனித நாமச் சந்தைக்கு வருகை புரிந்திருக்கின்றார். யார் வேண்டுமானாலும் அவரை கண்டு தரிசிக்க முடியும் விரைந்து ஓடி வாருங்கள்! இல்லையெனில் ஜகாய் மாதாய் என்ற இரண்டு மகாபாவிகளுமே நாமச்சந்தையை கொள்ளையடித்து அதில் உள்ள நன்மைகளை எல்லாம் எடுத்துக்கொள்வார்கள்
2.புனித நாமச் சந்தையின் உரிமையாளர்கள் ஸ்ரீஅத்வைத ஆச்சார்யரும் சனாதன கோஸ்வாமியும் என்பதை நீ அறந்து கொள்ள வேண்டும் அதன் புனித நாம சேமிப்பு கிடங்கின் பாதுகாவலர் தேர்ந்த நிர்வாகியான கதாதர பண்டிதராவார்
3.சந்தையின் காவல் குழுவினர் ஹரிதாஸ் டாக்குரர் மற்றுமுள்ள பக்தர்களுமாவர் சஞ்சயன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மேலதிகாரிகளாவர் கேசவபாதியும் வித்யா வாசஸ்பதியும் தரகர்களாவர் க்ருஷ்ணதாஸ் மற்றும் பலரும் இதன் சேவகர்களாவர் ஸ்ரீவாச பண்டிதர் கஜானா அதிகாரியாவர் கேதார்நாத் பக்தி விநோதா பெருக்கி சுத்தம் செய்யும் பணிக்கு உரிமையுடையவர்
4. நாமச்சந்தையில் கிடைக்கும் பொருட்களுக்கான விலையானது ஒன்பது விதமான பக்தித் தொண்டுகளேயாகும். எல்லாவற்றிலும் மிகவுயர்ந்த ரஸமான தெய்வீக காதல் அன்பே இங்கு செல்லுபடியாகும் ரூபாய் நோட்டுக்களாகும். இங்கு வாங்கும் பொருட்களுக்கு எந்தவரையறையும் கிடையாது இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகக்குறைந்த முதலீட்டை கொண்டுவந்தாலும் அதற்கு பதிலாக அவர்கள் வாங்கி செல்லும் நன்மைகளின் அளவோ மிக மிக அதிகமான தன்னிகரற்றதாகும்.
5.ஓ மக்களே! நீங்கள் அனைவரும் உங்கள் விருப்பத்திற்கேற்ப எவ்வளவு தேவையோ அதற்கும் அதிகமாகவே இங்கு வந்து பெற்று செல்லலாம். இது எப்போதுமே குறைவடையாது. இது கடவுள் மீதான தூய அன்பை அடைவதற்கான நல்லுபதேசமாகும் உன்னத அமிர்தமாகிய பகவான் ஸ்ரீகிருஷ்ரின் புனித நாமமே இந்த நாமச் சந்தையாக உருவெடுத்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளவேண்டிய நற்செய்தியாகும் உங்களுக்கு கிடைக்கக் கூடிய இந்த நன்மையில் துளியும் வன்ம்மோ.பாரபட்சம் என்பதோ கிடையவே கிடையாது. ஒவ்வொருவருமே இங்கு எல்லோராலும் ஒரே விதமான தட்டுகளில் உண்ணும்படி சம்மாக்கே நடத்தப்படுவார்கள். அதன் விளைவாக நாம் அனைவரும் உன்னத ஆனந்த்ததையடையலாம் என்பதை நிதர்சனமாகும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment