அக்ரோத பரமானந்தா
துவேஷமற்ற நித்திய ஆனந்தத்தின் இருப்பிடமே பிரபு நித்யானந்தர் -லோச்சன தாஸ் டாக்குரரின் "சைதன்ய மங்களா "விலிருந்து
1
அக்ரோத பரமானந்த நித்யானந்த ராய்
அபிமான சூன்ய நிதாய் நகரே பேடாய்
2
அதம பதித ஜீவேர் தவாரே த்வாரே கியா
ஹரீ நாம் மஹா மந்த்ர தேனோ பிலாய்யா
3
ஜாரே தேகே தாரே கோஹே தந்தே தருண தோரி
ஆமாரே கினியா லோஹோ பஜோ கௌர ஹரீ
ஓ பாய்ரே தாதேர பாயே தோரி மதாய் ரே தோர் பாயே போலி
போலோரே ஏக் பார் ஹரீ ஹரி
பாய் மாதாய் ரே தோர் பாயே போலி
போலோ ரே ஏக் பார் கௌர ஹரி
பாய் மாதாய் ரே தோர் பாயே போலி
4
ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி
பாவோ பரி தோரே ஜாபி
ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி
பாவோ பரி ஜாபி தோரே
ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி
பாவோ பரி தோரே ஜாபி
4.
எதோ போலி நித்யானந்த பூமே கடி ஜாய்
சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்
துலாதே லோடாய் துலாதே லோடாய்
சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்
சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்
சோனார பர்வத ஜேனோ கௌர ஹரி போலே
சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்
கௌர ஹரி ஹரி போலே துலாதே லோடாய்
5.
ஹேனோ அவதாரே ஜார் ரதி நா ஜன்மிலோ
லோச்சன் போலே ஸேய் பாபி யேலோ ஆர் கேலோ
1.பிரபு நித்யான்நத ராய் மிகவும் அமைதியானவர் அவரிடம் கோபம் என்பதே கிடையாது பகவானின் அனைத்து மேன்மைமிக்க உன்னத குணங்களையும் பேரானந்தத்தையும் தன்னகதே கொண்டவருமாவார் அறியாமையின் காரணமாக அநாகரீகம் மேலோங்கும் போது நித்யானந்தபிரபு நகரந்தோறும் சென்று எச்சரிக்கின்றார்.
2. வீடு வீடாக சென்று இல்லம் தோறும் கதவைத்தட்டி ஹரி நாமமாகிய மஹா மந்திர பரிசை அனைவருக்கும் இலவசமாக விநியோகித்து மிகவும் இழிவடைந்த வீழ்ந்த ஆத்மாக்களை கரையேற்றுகின்றார்.
3.மிக்க ஆச்சர்யத்துடன் நித்யானந்த பிரபு தன்னைக் காணும் எவரையும் உங்களுடைய பற்களுக்கு இடையே கௌர ஹரி யே தயவு செய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் ஹரியின் பாதத்தை பற்றிக் கொள்ளுமாறு தூண்டுகின்றார் என்று கூறி கௌர
(ஓ எனதருமை சகோதரரே
நான் உங்களுடைய பாதங்களைப் பிடித்துக் கெஞ்சுகின்றேன் ஓ மதாய் நான் உங்களது பாதங்களை பிடித்து கெஞ்சுவது என்னவென்றால் ஒரே ஒரு முறை ஹரி ஹரி என்று ஜபியுங்கள் அருமை மதாய் ஒரே ஒரு முறை மட்டும்ட கௌரஹரி என்று சூறுங்கள் அவரது புனித நாமத்தை நீங்கள் உச்சரிப்பதன் மூலம் இந்த துன்பமான ஜட உலக வாழ்விலிருந்து விடுதலை பெற முடியும் என்று கெஞ்சுகிறார்
4.கெஞ்சிக் கொண்டு இருக்கும் போதே நித்யானந்த பிரபு தரையில் உருண்டு விழுந்தார் உருண்டு விழுந்த காட்சியானது பெரிய பொன்னிறமானதொரு மலையானது புழுதியில் பிடித்து தள்ளப்பட்டது போன்று காட்சியளித்தது அவர்
(அவர் தரையில் தள்ளப்பட்டு உருண்டு விழுந்தார் அந்நிலையில் அவரைக் காணும் போது பொன்னிற மலையா னது பூமியின் மீது உருள்வது போன்று இருந்தது மலையானது கௌர ஹரி கௌர ஹரி மீண்டும் "கௌர ஹரி கௌர ஹரி அந்த பொன்னிற என்று ஜபித்தது. மீண்டும் பிடித்து தள்ளப்பட்ட போதும் என்றே ஜபித்தது.)
5.லோசன் தாஸ் பிரபு கூறுகின்றார். பகவானின் உன்னத கருணைமிக்க அவதாரங்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு விழித்தெழாத ஜீவன்கள் யாராயினும் தனது பாவமிகு கர்மங்களை போக்கி கொள்ளும் வழியல்லாது மீண்டும் மீண்டும் இந்த ஜட சக்கரத்தின் சூழலில் சிக்குண்டு பிறப்பதும் இறப்பதுமாக போவதும் வருவதுமாகவே துன்புறுவர்
(இவ்வாறு எச்சரிப்பதன் மூலம் நித்யானந் த பிரபுவின் கட்டளையை உடனே ஏற்றுக்கொள்ள நம்மை அன்புடன் அழைக்கின்றார்.)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment